www.garudabazaar.com
iTechUS

BOX OFFICE : “ஆட்ட நாயகன்”.. விஜய் நடித்த 'வாரிசு'.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.

Vijay Varisu Movie Tamilnadu Box Office Collection Day 1

Also Read | விஜய்யின் வாரிசு படத்தின் OTT உரிமம்.. கைப்பற்றிய பிரபல நிறுவனம்! இவங்களா?

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் நேற்று (11.01.2023) வெளியாகி உள்ளது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Vijay Varisu Movie Tamilnadu Box Office Collection Day 1

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

Vijay Varisu Movie Tamilnadu Box Office Collection Day 1

இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Vijay Varisu Movie Tamilnadu Box Office Collection Day 1

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் 20 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | BOX OFFICE: “இப்போ நம்ம GAME ON” .. அஜித்தின் 'துணிவு'.. முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Movie Tamilnadu Box Office Collection Day 1

People looking for online information on Varisu, Varisu Movie Tamilnadu Box Office Collection, Vijay will find this news story useful.