www.garudabazaar.com
iTechUS

“நான் ஹர்ட் ஆகல... ஆனா அழுதேன்.. ஏன்னா..”.. ராபர்ட் மாஸ்டர் விவகாரத்தில் Bigg Boss ரச்சிதா Open talk!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

reason Rachitha cried in raja rani task Robert bigg boss

Also Read | சும்மாவா அவரை வாத்தி-ன்னு சொல்றாங்க.. ADK-க்கு விக்ரமன் கொடுத்த Life அட்வைஸ்.!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி சுமார் 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

reason Rachitha cried in raja rani task Robert bigg boss

இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்த ரச்சிதா, ராபர்ட் மாஸ்டரை தான் ஹர்ட் பண்ணியதாக நினைத்து அழுதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் ராஜா ராணி ராஸ்கில், ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக (ராஜகுருவாக) விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டனர். இந்த டாஸ்கில் முதல் நாள் உணவில் உப்பு இருந்ததாக ராணியார் ரச்சிதா கூற, படைத்தளபதி அசீமுக்கும் ராஜகுரு விக்ரமனுக்கும் வாக்குவாதம் வலுத்தது.

reason Rachitha cried in raja rani task Robert bigg boss

இதனை அடுத்து, மன்னருக்கு தெரியாமல் ராஜ்ஜியத்தின் செல்வப்பொக்கிஷங்களை திருடக்கூடிய சீக்ரெட் டாஸ்க்கை அசீம் மற்றும் கதிரவன் உதவியுடன் ராணியார் ரச்சிதா செய்ய வேண்டும் என பிக்பாஸ் பணித்தார். இந்த டாஸ்க்கின் இறுதி நாளான்று சீக்ரெட்டுகளை பிக்பாஸே வீடியோ போட்டு உடைத்தார். பின்னர் கன்ஃபெஷன் ரூமுக்கு விக்ரமனை அழைத்த பிக்பாஸ் ராஜ்ஜியத்தில் திருட்டுகள் நடப்பதால், தலைமையை மாற்ற சொல்லி கட்டளையிட்டார். இதனால் மன்னர் பொறுப்பு ராபர்ட்டிடம் இருந்து பறிக்கப்பட்டது. இதனை ஏற்க முடியாத ராபர்ட், தான் மிகவும் நம்பி பழகிய ரச்சிதா என்னை ஏமாற்றிவிட்டார், நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார், முதுகில் குத்திவிட்டார் என தனியே அமர்ந்து கண்ணீர்விட்டு புலம்ப, அது வெறும் டாஸ்க்தான் சாமி என ஹவுஸ்மேட்ஸ் சமாதானம் சொல்ல ராபர்ட் மாஸ்டரோ சமாதானம் ஆகவில்லை.

reason Rachitha cried in raja rani task Robert bigg boss

ஆனால் ராபர்ட் தன்னை அவ்வாறு பேசியதை தாங்கிக்கொள்ள முடியாத ரச்சிதா ஒரு பக்கம் அழத் தொடங்கினார். ஆனால் டாஸ்க்கிற்காகவே செய்தாலும் தான் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக மாஸ்டர் தன்னை கூறியதையும்,  முதுகில் குத்தி விட்டதாக விமர்சிப்பதையும் தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என கூறி கதறி அழுதார். அதன் பின்னர் சிறைக்கு சென்றும் ராபர்ட் அழுததையும், தன்னை பற்றி அப்படி கூறியதையும் குறிப்பிட்டு ரச்சிதா அழுதுகொண்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டியில் நடிகை ரச்சிதா,  “எனக்கு ஒரு கொள்கை உண்டு. நான் யாரையும் ஹர்ட் பண்ண கூடாது என்று நினைக்கிறேன். ராஜா ராணி டாஸ்கின் முடிவில் ராபர்ட் மாஸ்டர் சொன்னதால், நான் ஹர்ட் ஆகவில்லை. அதே சமயம் அவர் பெரியவர், அவர்  ஹர்ட்டாகி அழுவதை நினைத்தபோது எனக்கு குற்ற உணர்ச்சி உண்டானது. அதுதான் எனக்கு ஹர்ட் ஆனது” என்றும் குறிப்பிட்டார்.

Also Read | "சும்மா ஒண்ணும் வெளிய அனுப்பல!".. எலிமினேஷன் பற்றி மனம்திறந்த தனலட்சுமி

“நான் ஹர்ட் ஆகல... ஆனா அழுதேன்.. ஏன்னா..”.. ராபர்ட் மாஸ்டர் விவகாரத்தில் BIGG BOSS ரச்சிதா OPEN TALK! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

reason Rachitha cried in raja rani task Robert bigg boss

People looking for online information on Bigg boss, Rachitha, Raja rani task, Robert master will find this news story useful.