www.garudabazaar.com
iTechUS

"எமோஷன்ஸ் இருக்கு.. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி..".. வைரல் ஆகும் வாரிசு SNEEK PEEK Video..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் SNEEK PEEK வீடியோ வெளியாகி உள்ளது.

Thalapathy Vijay Varisu Movie SNEEK PEEK Video Released

Also Read | "நாங்கள் இருவரும் நண்பர்கள்".. அர்ஜூன் தாஸ் உடன் எடுத்த PHOTO குறித்து ஐஸ்வர்யா லெஷ்மி விளக்கம்!

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் நேற்று (11.01.2023) வெளியாகி உள்ளது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Thalapathy Vijay Varisu Movie SNEEK PEEK Video Released

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

Thalapathy Vijay Varisu Movie SNEEK PEEK Video Released

இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Thalapathy Vijay Varisu Movie SNEEK PEEK Video Released

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வாரிசு படத்தின் SNEEK PEEK வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் விஜய், யோகி பாபு, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தோன்றியுள்ளனர். விஜய்க்கு ராஷ்மிகா குட்டி கதை சொல்வது போல வீடியோ அமைந்துள்ளது. வீடியோ முடிவில், "ஸ்டார்ட்டிங் இருக்கு. என்டிங் இருக்கு.‌எமோஷன் இருக்கு. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி" என விஜய் பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | விஜய்யின் வாரிசு படத்தின் OTT உரிமம்.. கைப்பற்றிய பிரபல நிறுவனம்! இவங்களா?

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Varisu Movie SNEEK PEEK Video Released

People looking for online information on Varisu, Varisu Movie SNEEK PEEK Video, Vijay, Vijay Varisu Movie will find this news story useful.