www.garudabazaar.com
iTechUS

சாமி சரணம் ஐயப்பா... சபரிமலை யாத்திரை போகும் ‘துணிவு’ இயக்குநர் H.வினோத் ... வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Thunivu Director H Vinoth Walking to Sabarimala Temple

Also Read | "வாரிசுல இந்த 2 பாட்டுமே பிடிக்கும்".. "நானும் தமனும்".. மனம் திறந்த ஜிப்ரான்!

பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Thunivu Director H Vinoth Walking to Sabarimala Temple

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

Thunivu Director H Vinoth Walking to Sabarimala Temple

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Thunivu Director H Vinoth Walking to Sabarimala Temple

துணிவு படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் வினோத், தனது நண்பர் இயக்குனர் சரவணனுடன் சேர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து சென்றுள்ளனர்.

Thunivu Director H Vinoth Walking to Sabarimala Temple

மலைப்பாதையில் இயக்குனர் வினோத் நடந்து செல்லும் வீடியோ காட்சிகளையும் சரவணன் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "அஜித் சாரின் ‘துணிவு’ படம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இயக்குநர் வினோத் சபரிமலை யாத்திரை... சாமி சரணம் ஐயப்பா." என பதிவிட்டுள்ளார்.

Also Read | "இருமுடி கட்டி வாரோமப்பா".. சபரிமலைக்கு போகும் விக்கி.. AIR PORT-ல் குழந்தைகள் பற்றி அளித்த பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Director H Vinoth Walking to Sabarimala Temple

People looking for online information on H Vinoth, H Vinoth Walking to Sabarimala Temple, Sabarimala Temple, Thunivu, Thunivu Director H Vinoth will find this news story useful.