www.garudabazaar.com
iTechUS

"யாரு சாமி நீங்க".. விக்ரமனை மனசார பாராட்டிய நிவாஷினி.. ராபர்ட் சொன்னதுதான் அல்டிமேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Nivashini and Robert Praises Vikraman coffee making style

Also Read | விக்ரமன் & ஷிவின் கிட்ட நிவாஷினி சொன்ன விஷயம்.. விக்ரமனே சிரிச்சிட்டாரு..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

இதனிடையே, இந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசீமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், அமுதவாணனுக்கு ஹேர் ஸ்டைலை மாற்றும்படி சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்ய சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி மற்றும் நிவாஷினி ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

இந்த சூழ்நிலையில், வீட்டுக்குள் வந்திருக்கும் நிவாஷினி ராபர்ட் மாஸ்டர், குயின்சி ஆகியோரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, நிவாஷினிக்கு காபி போட்டு எடுத்துவந்து கொடுக்கிறார் விக்ரமன். அதை பெற்றுக்கொண்ட நிவாஷினி சியர்ஸ் சொல்லிவிட்டு அதனை குடிக்கிறார். அப்போது அருகில் இருந்த ராபர்ட் "மேல காபி பவுடர் போட்டு இருக்கீங்க. ஸ்டைலா?"  எனக் கேட்க, குயின்சி "அவர் எப்போதும் அப்படித்தான் பண்ணுவாரு. ஆனா நல்லா இருக்கும்" என்கிறார்.

கையில் கோப்பையுடன் நின்றிருந்த நிவாஷினி,"யாரு சாமி நீங்க? உண்மைய சொல்லனும்னா விக்ரமனுக்கு காபி போட தெரியாதுன்னு நெனச்சிட்டு இருந்தேன்" என சிரித்தபடியே சொல்கிறார். அப்போது ராபர்ட்,"அவர் சமையலே நல்லா பண்ணுவாரு" என்கிறார். இதனைக்கேட்டு நிவாஷினி ஆச்சர்யமடைகிறார்.

Also Read | "ரம்பா மாதிரியே இருக்கீங்க😊".. இளம் போட்டியாளரிடம் சொன்ன விக்ரமன்.! bigg boss

தொடர்புடைய இணைப்புகள்

Nivashini and Robert Praises Vikraman coffee making style

People looking for online information on Nivashini, Robert master, Vikraman will find this news story useful.