www.garudabazaar.com
iTechUS

"நீ எப்படி இவ்ளோ தூரம் வந்தே, புரியவே இல்ல எனக்கு".. ஹவுஸ்மேட் மூஞ்சுக்கு நேரா எகிறிய அசிம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Azeem reaction after housmate play in task bigg boss

Also Read | "AD ஷூட்ல பிஸி".. குயின்சி சொல்லி முடிச்சதும் விக்ரமன் கமெண்ட்.. மனுஷன் தமாஷா பேசுறாப்ல 😂

முன்னதாக கடந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி இருந்தார். இதற்கு மத்தியில்,   Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

Azeem reaction after housmate play in task bigg boss

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் Guest ஆக வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர்.

Azeem reaction after housmate play in task bigg boss

இதனிடையே, போட்டியாளர்கள் பிக் பாஸாகவும் மாறி மற்ற ஹவுஸ்மேட்ஸை இயக்கி வருகிறார்கள். டாஸ்க், சீக்ரெட் டாஸ்க் என பல விஷயங்களை அவர்கள் திட்டம் போட்டு அளித்தும் வருகின்றனர். அதன்படி, ADK, ஷிவின், கதிரவன் உள்ளிட்டோர் பிக் பாஸாக மாறி சில டாஸ்குகள் மற்றும் அசத்தலான அறிவிப்புகளையும் போட்டியாளர்களுக்கு கொடுத்திருந்தனர்.

அப்போது பிக் பாஸாக மாறும் கதிரவன், அனைத்து போட்டியாளர்களின் அருகே இருக்கும் சக போட்டியாளர் பற்றி பாசிட்டிவ் ஆன விஷயங்களை பேசும் படி அறிவுறுத்தி இருந்தார். இதில், அருகருகே இருந்த விக்ரமன் மற்றும் அசிம் ஆகியோர், மாறி மாறி ஒருவரை பற்றி பேசிய விஷயங்கள் பிக் பாஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

Azeem reaction after housmate play in task bigg boss

முன்னதாக, அசிம் மற்றும் விக்ரமன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். அப்படி இருக்கையில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பாசிட்டிவ் விஷயங்களை பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல மற்ற போட்டியாளர்களும் கதிரவன் கொடுத்த டாஸ்க்கின் பெயரில் தங்கள் அருகே இருக்கும் போட்டியாளர்கள் பற்றி பாசிட்டிவான விஷயங்களை பேசி இருந்தனர். இதனிடையே, அங்கே பேச வரும் ஷிவின் தனக்கு அருகே இருக்கும் அமுதவாணன் பற்றி பேசாமல் வேறொரு போட்டியாளர் பற்றி பேச வந்ததாக தெரிகிறது.

Azeem reaction after housmate play in task bigg boss

இதனை கவனித்த அசிம், "அவன் என்ன சொன்னான். உன் பக்கத்துல இருக்குறவங்களோட பாசிடிவ் பேசணும்ன்னு. உன் பக்கத்துல யாரு இருந்தா?" என அசிம் கேட்டதும் அமுதவாணன் என ஷிவின் பதில் தெரிவிக்கிறார். இதற்கடுத்து பேசும் அசிம், "அவர பத்தி தானே பாசிட்டிவ் சொல்லணும். நீ எல்லாம் எப்படி இவ்வளவு தூரம் வந்தே எனக்கு புரியவே இல்ல. தெளிவா தானே சொன்னாப்ல. அப்ப பிக்பாஸ் சொன்னா கேக்கவேமாட்டே எப்பவுமே அதான் உண்மை" என தெரிவித்தார்.

Also Read | "ரச்சிதாவ நான் கலாய்க்குறேன்ல, மாஸ்டருக்கு கபகபன்னு".. Jolly-ஆ இருந்த வீட்ல தொடங்கிடுச்சு ரகளை

தொடர்புடைய இணைப்புகள்

Azeem reaction after housmate play in task bigg boss

People looking for online information on Amudhavanan, Azeem, Bigg Boss Tamil 6, Shivin, Vijay tv, Vikraman will find this news story useful.