''ரஜினிலாம் அவர கம்பேர் பண்ணும் போது ஒன்னுமே கிடையாது'' - பிரபல நடிகர் அதிரடி
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், ஆரம்ப காலகட்டங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகியோர் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது , சிவாஜி சாரோட கடைசி நாட்களில் அவரை ஒவ்வொரு மாதமும் பார்த்து வந்தேன். கேமராவை ஃபேஸ் பண்ண முடியலையே என்ற அவரது வெறிக்கு, சிவாஜியை கம்பேர் பண்ணும் போது ரஜினிலாம் ஒன்னுமே கிடையாது. கேமராவ ஃபேஸ் பண்ண முடியலயேனு வருத்தம் சிவாஜிக்கு ரொம்பவே இருந்தது.
அதே போலத்தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனும். கமல் இப்போ பாலிட்டிக்ஸ்ல இருக்காரு. ஆனாலும் உள்ளுக்குள்ள அவருக்கு நடிகன் என்கின்ற வெறி போகவே போகாது. அப்படி இருந்தா தான் உண்மையான ஆர்ட்டிஸ்ட்'' என்றார்.
''ரஜினிலாம் அவர கம்பேர் பண்ணும் போது ஒன்னுமே கிடையாது'' - பிரபல நடிகர் அதிரடி வீடியோ