கொலைகாரனின் பெயரை கண்டுபிடித்தால் பரிசு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் அர்ஜூன் - விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் படம் 'கொலைகாரன்'.  இந்த படத்தை தியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை பாஃப்டா நிறுவனம் பெற்றுள்ளது.

Vijay Antony and Arjun's Kolaigaran team announced quiz to audience

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சைமன் கே.கிங் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்ய, முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் படக்குழு தற்போது போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கொலைகாரன்' படத்தில் கொலைகாரன் கதாப்பாத்திரத்தின் பெயரை கண்டுபிடிக்கும் 4 பேருக்கு ஃபாஸ்ட்டிராக்  வாட்ச் பரிசாக வழங்கப்படும்.  கொலைகாரன் திரைப்படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியுடன் பிரீமியர் காட்சிக்கான 100 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏப்ரல் 19 முதல் 24 ஆம் தேதி வரை 6 வெளியாகும் போஸ்டர்களில் துப்புகள் (Clues) கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை ஒருங்கிணைக்க வேண்டும்.

கேள்விக்கான பதிலை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் kgcontest2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பரிசு பெறுபவர்களின் விவரம் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

இந்த போட்டியில் அனைவரும் கலந்துகொள்ளலாம். ஒரு போட்டியாளருக்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும். நீங்கள் அனுப்ப வேண்டியது - கொலைகாரனின் பெயர், உங்களின் பெயர், வயது, கைபேசி எண் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.