மகளிர் தினம் கொண்டாடிய ‘தமிழரசன்’ டீம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘தமிழரசன்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

Vijay Antony's 'Thamizharasan' team celebrates Women's Day in the shooting spot

சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச்.4) கொண்டாடப்படுவதையொட்டி, நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள பெண்களுடன் இணைந்து படக்குழுவினர் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர்.

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இப்படத்தில் ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மேலும், பூமிகா, சோனு சூட், யோகிபாபு, ரோபோ ஷங்கர், முனீஸ்காந்த், இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.