ஆக்ஷன் கிங் அர்ஜுன், விஜய் ஆண்டணி முன்னணி நடிகர்களாக நடிக்கும் ‘கொலைகாரன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டிய அர்ஜுன், கொலைகாரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். த்ரில்லர்-ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரிக்கிறார்.
ஆண்ட்ரூவ் லூயிஸ் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.
சைமன் கே.கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு திலீப் சுப்புராயன் ஸ்டண்ட் அமைக்கிறார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Happy to announce Kolaigaran audio release is just around the corner. Can't wait for u guys to listen to the exciting songs of #kolaigaran😊
— vijayantony (@vijayantony) March 5, 2019
Tomorrow's paper ad and first look of kolaigaran 😎@akarjunofficial @andrewxvasanth @simonkking @mrsvijayantony @onlynikil pic.twitter.com/ig5GpFYGA3