அர்ஜூன் - விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் படம் 'கொலைகாரன்'. இந்த படத்தை ஆண்ட்ரு லூயிஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தை தியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'கொலைகாரன்' படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயனின் பாஃப்டா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த படம் வருகிற மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால் வெளியாகும் தேதி குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த படத்துக்கு சைமன் கே. கிங் இசைமைக்க, ரிச்சர்டு கெவின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். மேலும் முகேஷ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.