தளபதி விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட பிரபல காமெடியன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சூதுகவ்வும்', 'ஆடாம ஜெய்ச்சோமடா', 'உப்புக்கருவாடு' போன்ற படங்களில் முதன்மை வேடங்களில் நடித்துள்ளவர் கருணாகரன். இவர் ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.

Karunakaran tweets about Thalapathy Vijay for hir previous tweet

இவர் தற்போது ட்விட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவில்,  நான் பொதுவாக யாரையும் வெறுப்பதில்லை.  நடிகர் விஜய்க்கு எதிராக வெறுக்கத்தக்க வார்த்தைகளை நான் பயன்படுத்தியிருக்கக் கூடாது.

விஜய் அண்ணாவுக்கு தெரியும் எனக்கு பிடித்தமானவர்களில் அவரும் ஒருவர் என்பது.  நான் சமூகவலைதளங்களில் பயன்படுத்திய வார்த்தைகள் யார் மனதையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.

நடிகர் கருணாகரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லிங்கா, அஜித்துடன் விவேகம், தனுஷுடன் தொடரி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.