'திமிரு பிடிச்சவன்' படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தமிழரசன்'. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இவர் தமிழில் கடைசியாக விக்ரமுடன் 'ஐ' படத்தில் நடித்திருந்தார். இவர் சரத்குமாருடன் 'சமஸ்தானம்' உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனி தற்போது அர்ஜூனுடன் 'கொலைகாரன்', சத்யராஜ், ஜெய் ஆகியோருடன் இணைந்து 'காக்கி' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இதில் கொலைகாரன் படத்துக்கு விஜய் ஆண்டனியே இசையமைக்கிறார்.