பழம்பெரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 22, 2019 05:34 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘இளைய தலைமுறை’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தர்மராஜன் உடல்நலக் குறைவால் காலமானார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து "இளைய தலைமுறை", அக்கரை பச்சை, வடைமாலை ஆகிய படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜன். உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த தர்மராஜன் இன்று காலை மூச்சுதிணரல் காரணமாக மரணம் அடைந்தார்.
77 வயதாகும் தயாரிப்பாளர் தர்மராஜன், தனது மனைவி சாவித்திரி உடன் நீலாங்கரையில் உள்ள கபாலீஸ்வரர் நகரில் வசித்து வந்தார். தர்மராஜனின் மனைவி சாவித்திரி பத்திரிகை தொடர்பாளர் வி.பி.மணியின் சகோதரி ஆவார். தயாரிப்பாளர் தர்மராஜனின் இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Sivaji Ganesan, G.K.Dharmarajan, Passed away