மல்யுத்த வீரராக சுதீப் - பயில்வான் டிரைலர் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 22, 2019 05:08 PM
விஜய்க்கு வில்லனாக ”புலி” படத்தில் நடித்தவர் கிச்சா சுதீப். ”நான் ஈ” படத்தின் மூலம் புகழ் பெற்றவர், கன்னட உலகில் மிக முக்கிய ஹீரோவாக வலம் வருபவர்.

இப்போது அவரின் அடுத்த பயணம் தான் பயில்வான். கிச்சாவாக தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர், ராம் கோபால் வர்மாவுடன் தொடர்ந்து பணியாற்றி பாலிவுட்டிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகராக மாறியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, 'நான் ஈ' படத்தில் வில்லத்தனமான நடிப்பால் வெகுஜன ரசிகர்களையும் கவர்ந்தவர். தற்போது அவர் ’பயில்வான்’ என்ற அகில இந்திய படத்தின் மூலம் மிகப்பெரிய அலைகளை உருவாக்கியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது ’பயில்வான்’.
ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிக்க, கிருஷ்ணா இயக்கும் இந்த திரைப்படம் எமோஷன் மற்றும் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ட்ராமா. இதில் கிச்சா சுதீபா ஒரு மல்யுத்த வீரராக, தன் கனவுகளை நனவாக்க அவர் மேற்கொள்ளும் பயணத்தையும், அதில் அவர் சந்திக்கும் சவால்களை பற்றிய கதை. அகான்ஷா நாயகியாக நடிக்க, மிகவும் திறமையான மற்றும் பிரபலமான நடிகர் சுனில் ஷெட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
மல்யுத்த வீரராக சுதீப் - பயில்வான் டிரைலர் இதோ! வீடியோ