பிரபல பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கனின் தந்தை மரணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஹம் தில் தே சுக்கே சனம்', 'கோல்மால்' 'சிங்கம்', 'ஹிம்மத்வாலா', 'திரிஷ்யம்' போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். இவரது தந்தை வீர் தேவ்கன் பாலிவுட் திரையுலகில் புகழ் பெற்ற சண்டைப் பயிற்சி இயக்குநராக விளங்கினார்.

Ajay Devgn's father Veeru Devgan Passed Away

மேலும் அவர், அஜய் தேவ்கன், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடித்த 'ஹிந்தூஸ்தான்கிகஸம்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் வீர் தேவ்கன் மே 27 இன்று காலை அவரது வீட்டில் மரணமடைந்தார்.

அவரது மறைவிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் , அஜய் தேவ்கன் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.