www.garudabazaar.com

வாரிசு & துணிவு.. இதற்கு முன் ஒரே சமயத்தில் வெளியான அஜித் - விஜய் படங்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

9 வருடங்களுக்கு பிறகு அஜித் & விஜய் நடித்த முறையே துணிவு & வாரிசு திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வரும் 2023 பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளன.

Varisu Thunivu Pongal Race Ajith Vijay Previous Clash Films

Also Read | 'துணிவு' படத்தின் டிஜிட்டல் OTT உரிமம்.. கைப்பற்றிய பிரபல முன்னணி நிறுவனம்! மாஸ்

அஜித் விஜய் படங்கள் திரையரங்கில் வெளியாகும் பொழுது  தமிழ் சினிமா புதிய சாதனையைத் தொடும். அதிலும் குறிப்பாக 2 நாயகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் பொழுது சினிமா உலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்.

இதுவரை அஜித் விஜய் திரைப்படங்கள் வெள்ளித்திரையில் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

முதன் முதலாக கோயம்புத்தூர் மாப்பிள்ளை - வான்மதி திரைப்படங்கள் ரிலீசாகின. அகத்தியன் இயக்கியிருந்த வான்மதி திரைப்படத்தின் குழுவினர் மீண்டும் இணைந்து தான் காதல் கோட்டை எனும் மிகப்பெரிய வெற்றித் திரைப்படம் உருவானது.

Varisu Thunivu Pongal Race Ajith Vijay Previous Clash Films

இரண்டாவது தடவை பூவே உனக்காக, கல்லூரி வாசல் திரைப்படங்கள் வெளியாகின. மூன்றாம் முறையாக 'காதலுக்கு மரியாதை' & 'ரெட்ட ஜடை வயசு' திரைப்படம் ஒரே சமயத்தில் வெளியானது.

நான்காம் முறை விஜய்யின் 'நிலவே வா' &  அஜித் நடித்த 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. ஐந்தாம் முறையாக 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படமும் 'உன்னை தேடி' திரைப்படமும் வெளியாகின. ஆறாம் முறையாக 'குஷி' திரைப்படமும் 'உன்னைக்கொடு என்னைத்தருவேன்' திரைப்படமும் ரிலீசாகின.

Varisu Thunivu Pongal Race Ajith Vijay Previous Clash Films

ஏழாம் முறையாக 'தீனா'வும் 'பிரண்ட்ஸ்' திரைப்படமும் ரிலீசாகின. தீனா திரைப்படம் ஆக்ஷன் ஹீரோவாக அஜித்தின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.

எட்டாவது முறையாக பகவதி திரைப்படமும் வில்லன் திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானது‌. ஒன்பதாவது முறையாக திருமலை திரைப்படமும் ஆஞ்சநேயா திரைப்படமும் ரிலீசாகின.  விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய திரைப்படம் திருமலையாகும்.

Varisu Thunivu Pongal Race Ajith Vijay Previous Clash Films

பத்தாவது முறையாக ஆதி திரைப்படமும் பரமசிவன் திரைப்படமும் வெளியாகின. 11வது முறையாக விஜய்யின் போக்கிரி, அஜித்தின் ஆழ்வார் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.  12வது முறையாக 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வீரம், ஜில்லா திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வெளியானது‌ குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது  அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல  விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வருகிறது. இவ்வாறு இரண்டு படங்களும் பொங்கலுக்கு ஒரே நாளில் வெளியாகுமா என்பதே ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Also Read | VIDEO: நடிகர் S.J. சூர்யா வாங்கிய புதிய சொகுசு கார்.. விலை இவ்ளோவா? அப்படி என்ன ஸ்பெஷல்?

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Thunivu Pongal Race Ajith Vijay Previous Clash Films

People looking for online information on Ajith Kumar, Thunivu, Varisu, Vijay will find this news story useful.