www.garudabazaar.com

பொங்கல் ரேஸில் வாரிசு - துணிவு .. 8 வருடத்திற்கு பின் எதிர்பார்ப்பில் விஜய் - அஜித் fans.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமாரின் அடுத்த திரைப்படமான 'துணிவு', 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay varisu and ajith thunivu will release on 2023 pongal

Also Read | "கோவக்காரன் தான்.. பாவக்காரன் இல்ல‌..".. வெளியேறுவது குறித்து அசீம் பரபரப்பு பேச்சு

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை H. வினோத் இயக்கி இருந்தார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

வலிமை திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மீண்டும் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளனர்.

vijay varisu and ajith thunivu will release on 2023 pongal

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. துணிவு படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், நடிகர் ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், துணிவு படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay varisu and ajith thunivu will release on 2023 pongal

மறுபக்கம், நடிகர் விஜய் நடிப்பில் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படமும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என தீபாவளி தினத்தன்று அறிவிக்கப்பட்டது. இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் வாரிசு படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பு, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய பட்டாளமே நடிக்கிறது.

இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

வாரிசு மற்றும் துணிவு என இரண்டு படத்திற்கும் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக வர உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் உச்சகட்ட ஆவலில் உள்ளனர். முன்னதாக, விஜய் நடிப்பில் வெளியான 'ஜில்லா' மற்றும் அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' ஆகிய திரைப்படங்கள், 2014 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாகவும், அதற்கு முன்பும் பல அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, சுமார் 8 ஆண்டுகள் கழித்து பொங்கல் ஸ்பெஷலாக விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | Thunivu : அஜித் நடிக்கும் 'துணிவு'.. தொலைக்காட்சி உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்!

தொடர்புடைய இணைப்புகள்

vijay varisu and ajith thunivu will release on 2023 pongal

People looking for online information on Ajith Kumar, Ajith Thunivu, Pongal Release, Vijay, Vijay Varisu will find this news story useful.