www.garudabazaar.com

Varisu : செம ஸ்டைலான லுக்கில் தளபதி விஜய்... Trend ஆகும் புதிய BTS ஃபோட்டோஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை உருவாக்கி வருகிறார்.

Official Vijay Varisu Movie HD Viral BTS Photos

Also Read | 'இடம் பொருள் ஏவல்' ரிலீஸ் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி நெகிழ்ச்சி ட்வீட்.. வைரல் BTS

'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

Official Vijay Varisu Movie HD Viral BTS Photos

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர்,.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, பென்குயின், ஆதிபுருஷ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். கார்த்திக் பழனி மெர்குரி (2018) மற்றும் பேட்ட (2019) ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளராக பணியாற்றினார். பல ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியவர்.

Official Vijay Varisu Movie HD Viral BTS Photos

கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில வாரங்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Vijay Varisu Movie HD Viral BTS Photos

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய BTS ஸ்டில்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய், கோட் சூட் உடையில் நவநாகரீக தோற்றத்தில் இதில் காணப்படுகிறார். மேலும் விஜய் சிரிப்பது போல இன்னொரு புகைப்படமும், கேமராவை கையில் வைத்துக் கொண்டு தெருவில் நடந்து வரும் புகைப்படமும் வெளியாகி உள்ளது.

Also Read | சென்னை ஏர்போர்ட்டில் அஜித்.. ரசிகர்கள் & அதிகாரிகளுடன் ஜாலி பேச்சு! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Official Vijay Varisu Movie HD Viral BTS Photos

People looking for online information on Varisu, Vijay, Vijay Varisu Movie will find this news story useful.