www.garudabazaar.com

Thunivu : அஜித் நடிக்கும் 'துணிவு'.. தொலைக்காட்சி உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான  அஜித் குமார் தற்போது 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார்.

Ajith Thunivu Satellite TV Rights Bagged by Kalaignar TV

Also Read | ட்விட்டரில் வாரிசு DP -ஐ வெச்ச தளபதி விஜய்.. ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோ

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது. சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை இருந்து வருகிறார். ரசிகர்களின் ரசிகர் மன்ற கணக்குகளே சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.

சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Ajith Thunivu Satellite TV Rights Bagged by Kalaignar TV

குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

Ajith Thunivu Satellite TV Rights Bagged by Kalaignar TV

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Ajith Thunivu Satellite TV Rights Bagged by Kalaignar TV

இந்நிலையில் இந்த துணிவு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு போஸ்டரில் துணிவு படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அஜித் நடித்த பில்லா, ஏகன் படங்களின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | Harish Kalyan Wedding : ஹரிஷ் கல்யாண் திருமணம்.. தாலி கட்டிய தருணம்.. TRENDING PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Thunivu Satellite TV Rights Bagged by Kalaignar TV

People looking for online information on Ajith Kumar, Ajith Thunivu Satellite TV Rights, Kalaignar TV, Thunivu will find this news story useful.