www.garudabazaar.com

'துணிவு' படத்தின் டிஜிட்டல் OTT உரிமம்.. கைப்பற்றிய பிரபல முன்னணி நிறுவனம்! மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் துணிவு படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமம் குறித்த தகவல்  வெளியாகி உள்ளது.

Ajith Kumar AK Thunivu OTT Digital Rights Bagged by Netflix

Also Read | ட்விட்டரில் வாரிசு DP -ஐ வெச்ச தளபதி விஜய்.. ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோ

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

இந்த படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

இந்த படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

Ajith Kumar AK Thunivu OTT Digital Rights Bagged by Netflix

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி  சென்னையில் துவங்கியது. சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் அரக்கு பள்ளத்தாக்கில் நடந்து முடிந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் நடைபெற்றது. இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். பிக்பாஸ் பிரபலம் அமீர் & பாவனி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Ajith Kumar AK Thunivu OTT Digital Rights Bagged by Netflix

இந்த படத்தின் ஒளிப்பதிவை நிரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. உலகளவில் மிகப்பெரிய நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் தளம் துணிவு படத்தின் தியேட்டர் ரிலீஸ்க்கு பிந்தைய டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றி உள்ளது.

Also Read | Thunivu : அஜித் நடிக்கும் 'துணிவு'.. தொலைக்காட்சி உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK Thunivu OTT Digital Rights Bagged by Netflix

People looking for online information on Ajith Kumar, Netflix, Thunivu, Thunivu OTT Digital Rights will find this news story useful.