www.garudabazaar.com

'துணிவு' படத்தில் இணைந்த 'சதுரங்க வேட்டை' நடிகர்.. அவரே வெளியிட்ட பரபர அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித்குமாரின் 'துணிவு' படத்தில் பிரபல சதுரங்க வேட்டை நடிகர் இணைந்துள்ளார்.

Sathuranga Vettai actor Joined the cast of Thunivu Movie

Also Read | PS1: OTT-யில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்' .. எப்போ? எதுல?

வலிமை படத்துக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு  'துணிவு' என பெயரிடப்பட்டது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

Sathuranga Vettai actor Joined the cast of Thunivu Movie

இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார்.

Sathuranga Vettai actor Joined the cast of Thunivu Movie

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Sathuranga Vettai actor Joined the cast of Thunivu Movie

இந்நிலையில் துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.  பிரபல சதுரங்க வேட்டை நடிகர் வளவன், தனது முகநூல் பக்கத்தில் துணிவு படத்தின் டப்பிங் பணிகளை தான் துவங்கி உள்ளதாக  அறிவித்துள்ளார். மேலும் டப்பிங் ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு பொறியாளர் & இயக்குனர் எச். வினோத்துடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Also Read | SARDAR: முதல் வாரத்தை விட 2வது வாரத்தில் அதிக தியேட்டர்கள்.. செம மாஸ் காட்டும் 'சர்தார்'!

தொடர்புடைய இணைப்புகள்

Sathuranga Vettai actor Joined the cast of Thunivu Movie

People looking for online information on Ajith Kumar, Sathuranga Vettai actor, Thunivu Movie will find this news story useful.