www.garudabazaar.com

சென்னை ஏர்போர்ட்டில் அஜித்.. ரசிகர்கள் & அதிகாரிகளுடன் ஜாலி பேச்சு! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் எடுத்த புகைப்படங்கள் & வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Thunivu Ajith kumar AK at Chennai International Airport with Fans

Also Read | 'இடம் பொருள் ஏவல்' ரிலீஸ் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி நெகிழ்ச்சி ட்வீட்.. வைரல் BTS

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் துணிவு படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.  துணிவு படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.

ஐத்ராபாத்,  சென்னை & விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில்  நடந்த படப்பிடிப்பு சிலநாட்களுக்கு முன் நிறைவடைந்தது.

துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thunivu Ajith kumar AK at Chennai International Airport with Fans

இந்நிலையில் நடிகர் அஜித், சென்னை விமான நிலையத்தில் நீல் நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் ரசிகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் எடுத்த புகைப்படங்கள் & வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ரசிகர்களுடன் சிரித்து ஜாலியாக பேசிய படி அஜித் சோதனை செய்ய செல்வது போல வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும் மற்றொரு வீடியோவில் மெட்டல் டிடெக்டர் சோதனையில் ஈடுபட்ட அதிகாரியிடம் அஜித், புண்முறுவலுடன் பேசும் வீடியோ காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றன.

மேலும் ஏர்போர்ட் அதிகாரிகள் மற்றும் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்கள் & வீடியோக்கள் உள்நாட்டு முனையத்தில் எடுக்கப்பட்டது என புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது.

 

Also Read | லண்டனில் பிறந்தநாளை கொண்டாடிய அமலா பால்.. வைரலாகும் செம போட்டோஸ்!

சென்னை ஏர்போர்ட்டில் அஜித்.. ரசிகர்கள் & அதிகாரிகளுடன் ஜாலி பேச்சு! வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Ajith kumar AK at Chennai International Airport with Fans

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar with Fans, Chennai International Airport, Thunivu, Thunivu Ajith kumar will find this news story useful.