www.garudabazaar.com

VIDEO: நடிகர் S.J. சூர்யா வாங்கிய புதிய சொகுசு கார்.. விலை இவ்ளோவா? அப்படி என்ன ஸ்பெஷல்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் - இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா புதிய சொகுசு காரை வாங்கியுள்ளார்.

Sj Suryah Bought a new bmw z4 roadster luxury car specifications

Also Read | Thunivu : அஜித் நடிக்கும் 'துணிவு'.. தொலைக்காட்சி உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த "வாலி" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. இந்த படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் விஜய் நடித்த குஷி படத்தை இயக்கினார்.  பின்னர்  எஸ் ஜே சூர்யா தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் குஷி படத்தை தெலுங்கில் இயக்கினார். 

ஹீரோவாக நியு படத்தின் மூலம் எஸ்.ஜே. சூர்யா அறிமுகமானார். இந்த படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து அன்பே ஆருயிரே, வியாபாரி, திருமகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

Sj Suryah Bought a new bmw z4 roadster luxury car specifications

இதையடுத்து அவர் நடித்த 'இறைவி' படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. விஜய்யின் 'மெர்சல்' உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து கவனத்தைப் பெற்றார். அதே நேரத்தில் 'மான்ஸ்டர்' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி பெற்றார். சிம்புவுடன் அவர் நடித்த 'மாநாடு', சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படங்களின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம், விஜய் நடிக்கும் 'வாரிசு', விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜாக்கி பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார்.

Sj Suryah Bought a new bmw z4 roadster luxury car specifications

இந்நிலையில் எஸ் ஜே சூர்யா, புதிய BMW Z4 Roadster Melbourne Red சொகுசு காரை வாங்கியுள்ளார். இதன் விலை 71 லட்சம் ரூபாய் முதல் 85 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இரண்டு நபர்கள் மட்டுமே பயணம் செய்யும் வசதி கொண்டது.  இந்த கார் பெட்ரோல் லிட்டருக்கு 11 கிலோமீட்டர் மைலேஜ் தரவல்லது. 3000 சிசி இன்ஜினும் 335 BHP திறனும் கொண்டது. மேலும் வானிலை தட்ப வெப்ப கட்டுப்பாடு வசதி, டிராபிக் கட்டுப்பாடு வசதி, பார்க்கிங் சென்சார் வசதி கொண்டது.

Sj Suryah Bought a new bmw z4 roadster luxury car specifications

இந்த காரை எஸ். ஜே. சூர்யா சென்னையில் உள்ள பிரபல பி.எம்.டபிள்யூ ஷோ ரூமில் வாங்கியுள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர், எஸ். ஜே. சூர்யாவுடன் கார் வாங்கும் வீடியோவில் காணப்படுகிறார்.

 

 

Also Read | 'துணிவு' படத்தின் டிஜிட்டல் OTT உரிமம்.. கைப்பற்றிய பிரபல முன்னணி நிறுவனம்! மாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Sj Suryah Bought a new bmw z4 roadster luxury car specifications

People looking for online information on Bmw z4 roadster car, Sj suryah, Sj Suryah Bought a bmw z4 roadster luxury car will find this news story useful.