வனிதாவின் திருமணம் முடிந்த பிறகு.. மகளின் எமோஷனல் வார்த்தைகள்.! - என்ன சொல்கிறார் தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வனிதா விஜயகுமார் தனது மகளின் எமோஷனல் பதிவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அம்மாவின் திருமணத்திற்கு பிறகு வனிதாவின் மகள் என்ன சொல்கிறார் தெரியுமா.? | vanitha vijaykumar's daughter jovika opens on her

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார். 

இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் மறுமனம் குறித்து அவரது மகள் ஜோவிகா எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''உங்களை நினைத்தால் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அப்பாவை இந்த குடும்பத்திற்கு வரவேற்பதில் நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். இப்போது தான் இது முழுமையடைகிறது. ஒருநாள் உங்களை போல நண்பர்கள் எனக்கு கிடைப்பார்கள். பலர் பல விஷயங்களை சொல்லட்டும், ஆனால் நினைவில் வைத்து கொள்ளுங்கள், இது நம் வாழ்க்கை, நாம் இதை வாழ போகிறோம். நமது வாழ்க்கை காதலால் நிறைந்து இருக்கட்டும்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

அம்மாவின் திருமணத்திற்கு பிறகு வனிதாவின் மகள் என்ன சொல்கிறார் தெரியுமா.? | vanitha vijaykumar's daughter jovika opens on her

People looking for online information on Peter Paul, Vanitha, Vanitha Daughter Jovika, Vanitha Vijayakumar will find this news story useful.