வனிதாவின் திருமண விவகாரம் - நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்வீட் - ''அதிர்ச்சியடைந்தேன்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வனிதாவிற்கும் பீட்டர் பால் என்பவருக்கும் நேற்று (27/06/2020) நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. அவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Lakshmy Ramakrishnan tweets about Vanitha and Peter Paul wedding issues | வனிதாவின் திருமண விவகாரம் குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்வீட்

இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் , ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி தன்னை விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகை வனிதா, தன்னிடம் பணம் பறிப்பதற்காக அவர் இத்தகைய புகார் கூறியுள்ளதாகவும், அதனை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள இயக்குநரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், இப்பொழுது தான் இந்த செய்தியை பார்த்தேன். அவர் ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. படிப்பும், புகழ் வெளிச்சம் உள்ளவர் இப்படி ஒரு தவறை செய்ய முடியும் ? அதிர்ச்சியடைந்தேன். வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவர் ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை ?  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Lakshmy Ramakrishnan tweets about Vanitha and Peter Paul wedding issues | வனிதாவின் திருமண விவகாரம் குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்வீட்

People looking for online information on Lakshmy Ramakrishnan, Vanitha will find this news story useful.