போஸ்டர் ஒட்ட வீதிக்கு வந்த பிரபல டைரக்டர் - தேசிய விருது படத்திற்கு செம மரியாதை!
முகப்பு > சினிமா செய்திகள்தேசிய விருது பெற்ற பாரம் படத்திற்காக மிஷ்கின் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் இயக்கிய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான சைக்கோ படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தமிழில் வெளியான பாரம் படத்திற்காக மிஷ்கின் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரம் படத்திற்கு அதிக கவனம் கிடைக்க வேண்டும் என இயக்குநர் மிஷ்கின், அப்பட போஸ்டர்களை வீதிகளில் இறங்கி நேரடியாக ஒட்டினார். இந்த சம்பவம் திரைத்துறையினர் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவனிக்க வைத்துள்ளது. இதையடுத்து பாரம் படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி, 'மிஷ்கினின் செயல் விலைமதிக்கப்பில்லாதது. அவருக்காக ஒட்டுமொத்து பாரம் டீமும் நன்றி சொல்லி கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.