பிரபல தொலைக்காட்சி சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் 3 ஸ்டார்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 30, 2019 11:06 AM
தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. பங்கேற்பாளர்களுக்கிடையே நிகழ்ந்த காதல்கள், சண்டைகள் உள்ளிட்டவை நிகழ்ச்சியை எப்பொழுதும் பரபரப்பாகவே வைத்திருந்தது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை அதிகம் பேசப்பட்ட போட்டியாளர்களில் முக்கியமானவர் வனிதா விஜயகுமார். ஏற்கனவே நடிகையாக ரசிகர்களுக்கு பரீட்சையமானவர், இந்த நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். சந்திரலேகா தொடரின் புரோமோவை வனிதா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பகிர்ந்துள்ளார். நடிகை வனிதா, தளபதி விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Singapenney #Singappengal #singapenvani #vanitha #vanithavijaykumar #BiggBossTamil3 #BigilDiwali #ThalapathyVijay #HappyDeepavali
THE GIVE BACK MOMENT #PodraVediya pic.twitter.com/vkasqUu07v
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 27, 2019