தன் அடுத்த Project குறித்து அறிவித்த நடிகை வாணி போஜன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு, வைபவ் இணைந்து நடித்து வரும் படம் 'லாக்கப்'. இந்த படத்தை பிரபல நடிகர் நிதின் சத்யா தனது ஸ்வேத் புரொடக்ஷன் சார்பில் இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் வைபவிற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.

Vani Bhojan announced his next Project's director in Instagram

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகர் அசோக் செல்வனுடன் வாணி போஜன் 'ஓ மை கடவுளே' படத்தை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை வானி போஜன் தனது அடுத்த Project குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். அதில், சாருகேஷ் என்பவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து டைரக்டர், விவரங்கள் விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பிரபல தொகுப்பாளர் அஞ்சனா ரங்கன், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன் தெரியுமா? இது பெஸ்ட். இந்த மனிதர் சிறப்பானவர்'' என்று பதிலளித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@charukeshs The director 😎 details out soon :) #cantwait #newproject

A post shared by Vani Bhojan (@vanibhojan_) on