Behindwoods Gold Medals Short Film போட்டியின் வெற்றியாளர்கள் விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிறுவனமான Behindwoods நிறுவனம் சினிமா, அரசியல், பொது நிகழ்வுகள், யூடியூப் காணொளிகள் என அனைத்து தளங்களிலும் தகவல்களை சுவாரஸியமாகவும் உடனக்குடன் வழங்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.

The winners list of Behindwoods Gold Medals Short Film contest is Out

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு வருடமும் Behindwoods Gold Medals என்ற பிரம்மாண்ட விழாவை நடத்தி திரைத்துறை மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் திறமையான கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு Icon of inspration விருதுகள் வழங்கி ஊக்குவித்து வருகிறது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு சென்னை டிரேட் சென்டரில் டிசம்பர் 8 ஆம் தேதி 7வது Behinndwoods Gold Medals விழா நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு Behindwoods குறும்பட போட்டி ஒன்றை அறிவித்திருந்தது.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், கவிதாலயா புரொடக்ஷன்ஸ் மற்றும் Behindwoods இணைந்து தயாரிக்கும் வெப் சீரிஸை இயக்கும் வாய்ப்பும் கிடைக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இந்த வருடம் 550+ குறும்படங்கள் கிடைக்கப்பெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 குறும்படங்கள் பற்றிய தகவலும், அதில் முதல் அந்த 5 படங்களின் இயக்குநர்கள் மற்றும் அவர்களின் படங்களும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வெற்றியாளர் Behindwoods Gold Medals விழாவில் அறிவிக்கப்பட்டு அவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். மற்ற 5 இயக்குநர்களுக்கும் ஸ்பெஷல் மென்சன் சான்றிதழ் வழங்கப்படும். இதன் டாப் 50 குறும்படங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட லிங்க்கை கிளிக் செய்யவும்.

.https://www.behindwoods.com/gold-medals-2019/shortfilms/#winner-list