பாகிஸ்தான் நபர் பேஸ்புக்கில் சுத்தியல் புகைப்படத்தை பகிர்ந்து உங்கள் மொழியில் இதன் பெயர் என்ன என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விக்னேஷ் என்கின்ற குறும்புக்காரர், எங்கள் ஊரில் இதற்கு பெயர் சுத்தியல், கிருஷ்ணமூர்த்தி என்பவர் காண்டிராக்டர் நேசமணியின் தலையில் சுத்தியலை போட்டுவிட்டார் என 'ஃபிரெண்ட்ஸ்' படத்தை நினைவுபடுத்தினார்.

உடனே அந்த பதிவிற்கு மற்றொருவர், SaveForNesamani என்று பதிலிட அது உலக டிரெண்டானது. தமிழர்கள் அல்லாதோர் இது காமெடி என்று புரியாமல் நேசமணி யார் அவருக்கு என்ன ஆச்சு என விழி பிதுங்கி நின்றனர்.
இந்நிலையில் தனது நேசமணி கேரக்டர் குறித்தும் அடுத்த திட்டங்கள் குறித்தும் வைகைப்புயல் வடிவேலு Behindwoods Tvக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அந்த வீடியோ யூடியூபில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்தது.
''கிளம்பிட்டான் யா கிளம்பிட்டான்'' - யூடியூபில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்த வடிவேலு வீடியோ