ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘தனி ஒருவன் 2’ படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் இயக்குநர் மோகன் ராஜா தீவிரமாக உள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் மோகன் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக Behindwoods குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது பிரத்யேகமாக பேட்டியளித்த இயக்குநர் மோகன் ராஜா, தனது இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘தனி ஒருவன் 2’ பற்றிய சுவாரஸ்யத்தை பகிர்ந்துக் கொண்டார்.
அவர் பேசுகையில், ‘தனி ஒருவன் 2, என்னை மொத்தமாக ஆட்கொண்டிருக்கு.. என்னுடைய பெஸ்ட்டை கொண்டு வர ட்ரை பண்ணிருக்கேன். சர்ப்ரைஸ் இருக்கு. யாரும் எதிர்பார்க்காத இயல்பான கதைக்களமாக இருக்கும். தனி ஒருவன் 2-வில் அதிக த்ரில் அம்சங்கள் இருக்க ஆசைப்படுகிறேன். தனி ஒருவனை விட இரண்டு மடங்கு அதிக கண்டெண்ட் இருக்கும்’ என மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், ‘10-ல் ஒன்னா ஒரு படம் பண்ண விரும்பல. பிறந்ததில் இருந்து எல்லாமே எளிதாக கிடைத்துவிட்டது. எல்லாரும் செய்றது செய்யணும் இல்லாம என்னுடைய தனித்தன்மையை கொடுக்க விரும்புகிறேன்’ என கூறியுள்ளார்.
‘சர்ப்ரைஸ் இருக்கு’- தனி ஒருவன் 2 சீக்ரெட் சொன்ன இயக்குநர் மோகன் ராஜா வீடியோ