''ஹாலிவுட்ல கூப்டுறாங்க, என் அடுத்த டார்கெட் ?'' - காண்டிராக்டர் நேசமணி வடிவேலு பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிரண்ட்ஸ்' படத்தில் காண்டிராக்டர் நேசமணியான வடிவேலுவின் தலையில் சுத்தியல் விழும் காட்சி திடீரென சமூக வலைதளங்களில் உலக அளவில் டிரெண்டானது.  கடந்த 2 நாட்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

Vadivelu on Friends Contractor Nesamani and Controversy

பிற மாநிலத்தவர்கள் இது என்ன விஷயம் என்பது தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். இந்நிலையில் நடிகர் வடிவேலு நேசமணியாக தான் நடித்த அனுபவங்கள் குறித்து Behindwoods Tvக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், நான் ஒரு படத்துல மாமியார் நாகம்மாள் மேல சத்தியம்னு சொல்வேன். இந்த விஷயம் வைரலாகும் போது உண்மையிலேயே என் மாமியார் இறந்துவிட்டார். அதனால் என்னால் யாரிடமும் ஒழுங்காக பதில் கூறமுடியவில்லை.

பிரெண்ட்ஸ் படத்தில் முதலில் நான் நடிப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. ஆனால் இயக்குநர் சித்திக் நான் நடிப்பதில் உறுதியாக இருந்தார். படப்பிடிப்பின் போது மலையாளத்தில் வந்த பிரெண்ட்ஸ் படத்தை பார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பினார். இல்ல சார் அத பார்த்தா நான் அதுபோலவே நடிக்க முயற்சி செய்வேன் அதனால் வேண்டாம் என்றேன்.

நான் காண்டிராக்டராக வேலை செய்திருந்தேன். அதனால் எனக்கு அந்த அனுபவம் இருந்தது. அதனால் என் ஸ்டைல் என் பாடி லாங்குவேஜ் என்று மாற்றி நடித்தேன். அப்போது விஜய் சார் சிரிச்சிக்கிட்டே இருக்காரு. நிறைய டேக் வாங்குனாரு.

அப்போது சித்திக் சார், விஜய்யிடம், கொஞ்ச நாக்க கடிச்சிக்கிறீங்களா? 8 டேக் போய்டுச்சார் என்கிறார். இந்த படத்தில் நான் நடித்ததை பார்த்து ஏராளமானோர் என்னை பாராட்டுனாங்க. சித்திக் சார் என்ன மிகவும் பாராட்டினார். 

என்னை மீம்ஸ் கிரியேட் செய்கிறார்கள். மீம்ஸ்களில் சில அரசியல்வாதிகளை விமர்சிக்கும் போது , கண்டனம் தெரிவியுங்கள் சார் என்று கேட்கின்றனர். ஸ்டாலின் சார் சட்டசபையில் இருந்து வெளியே வரும்போது சட்டை கிழிந்து வெளியே வருகிறார். அப்போது என் படத்தை போட்டு சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு என்று உருவாக்குகின்றனர்.

சினிமாவுல எனக்கு படம் இல்லனு சொல்றாங்க. எவ்வளவு தான் கேப் இருந்தாலும் என்னை மீம்ஸ் மூலமாக உலக அளவில் கொண்டு சேர்த்துட்டாங்க. அண்ணன் கவுண்டமணி எல்லோரையும் கலாய்ப்பாரு. அதுல அய்யாவ அடிச்சிக்கிறதுல ஆள் இல்ல. அதனால அவருக்கு சில பிரச்சனைகள் இருந்தது.

நாம அப்படி இல்ல. இப்போ பிரெண்ட்ஸ் படம் இருக்கு. ரெண்டு ஹீரோவும் எனக்கு கட்டுப்பட்டவங்க தான. அப்படி எல்லா ஹீரோக்களிடமும் போய்டுவேன். அப்படியே போவேன் வருவேன் . இது சில ஹீரோக்களுக்கு பிடிக்காது. என்னயா அவரு உங்கள போடா வாடாங்கிறாரு. ஏன்யா அதுக்குலாம் ஒத்துக்கிறீங்கனு ஒரு சில ஹீரோக்கள பிரிச்சுட்டீங்க.

ஒரு படத்துல டப்பிங்ல பேசியிருப்பேன். எனக்காட எண்ட் கார்டு போர்டுறீங்க. எனக்கு எண்டே கிடையாது டா என்பேன். அது உண்மையாகவே பழித்துவிட்டது. நெட்பிளிக்ஸ்ல போகப் போறேன் இப்போ ஹாலிவுட்ல லாம் என்ன கூப்டுறாங்க இப்போ என்றார்.

''ஹாலிவுட்ல கூப்டுறாங்க, என் அடுத்த டார்கெட் ?'' - காண்டிராக்டர் நேசமணி வடிவேலு பதில் வீடியோ