தளபதி இடத்தை பிடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின் - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கண்ணே கலைமானே' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு  வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, தமன்னா, வடிவுக்கரசி,  பூ ராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Udhayanidhi Stalin is to become DMK Youth Wing Secretary

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலின் போது திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் மேடைகளில் தோன்றி திமுகவுக்கு பிரச்சாரம் செய்தார்.

இதனையடுத்து கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணி தமிழகத்தில் கணிசமான வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுகவின் இளைஞர் அணித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கையின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். 

ஏற்கனவே அவரது தந்தை மு.க.ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி தலைவர் பதவியை வகித்து வந்ததும், திமுக தொண்டர்கள் அவரை தளபதி என்று புகழாரம் சூட்டி, அந்த பெயரிலேயே அழைத்து வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.