நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, பெண்கள அவமதிக்கும் விதமாக பேசியதுடன், நடிகை நயன்தாரா பற்றி அவதூறாக சில சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்குத் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இது குறித்து நடிகர் ராதாரவி Behindwoods தளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த ராதாரவி, திமுக விளக்கம் கேட்காமல், நடவடிக்கை எடுத்ததில் எனக்கு வருத்தம் தான். இருப்பினும் இது தற்காலிகம் தான் என கூறியிருந்தார். இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த ராதாரவி அவரது முன்னிலையில் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.