பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவந்த நாடாளுமன்றத் தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மே 23 ஆம் தேதி அனைத்து தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்கள் கருத்துகளை ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதில், ''மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களவை தேர்தலில் நீங்கள் சாதித்துவிட்டீர்கள்; கடவுள் ஆசிர்வதிக்கட்டும்'' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில்,
''பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
— Rajinikanth (@rajinikanth) May 23, 2019