நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம் குறித்து நடிகர் ராதாரவி பேட்டியளித்துள்ளார்.
நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, பெண்கள அவமதிக்கும் விதமாக பேசியதுடன், நடிகை நயன்தாரா பற்றி அவதூறாக சில சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.
நடிகர் ராதாரவியின் கருத்துக்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்குத் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது குறித்து நடிகர் ராதாரவி Behindwoods தளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், தனது கருத்தினால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவில்லை என்றும், திமுக-வின் நடவடிக்கை தான் இந்த விஷயத்தை பெரிதாக்கியதாகவும் ராதாரவி தெரிவித்துள்ளார்.
திமுக விளக்கம் கேட்காமல், நடவடிக்கை எடுத்ததில் எனக்கு வருத்தம் தான். எனது தரப்பு விளக்கத்தை கேட்க வாய்ப்பு கிடைக்கும்போது சொல்வேன். இது தற்காலிகம் தான் என அவர் கூறியுள்ளார்.
என்னை புகழ்வதை ஏற்கும்போது, என் மீதான விமர்சனங்களையும் ஏற்க தயார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான்களுடன் நடிகை நயன்தாராவை ஒப்பிட்டு பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
திமுக-வில் இருந்து நீக்கியதற்கு இதுவும் ஒரு காரணம்- ராதாரவி ஓபன் டாக் வீடியோ