தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்துள்ளது.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தேரத்ல் பிரச்சாரத்தில் மக்கள் அளித்த பேரன்பு கலந்த வரவேற்புக்கு நன்றி. வரவேற்போடும் நின்று விடாமல் வாக்குச்சாவடிக்கும் சென்று பெருவாரியான வாக்குகளை அள்ளித்தந்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றித் தந்த அத்துனை பேருக்கும் நன்றி ! நன்றி! நன்றி! என்று தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.
அந்த ட்வீட்டில் ஸ்டாலினுடன் கலைஞர் சமாதியில் மரியாதை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மற்றொரு ட்வீட்டில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் மற்றும் அண்ணா அறிவாலயம் முன்பு மக்கள் குழுமியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். #அண்ணாஅறிவாலயம் #திமுக #கலைஞர் #அண்ணா #தளபதி #வெற்றி #கெத்துடா ! என்று தெரிவித்திருந்தார்.