www.garudabazaar.com

போலீஸாக நடிகை த்ரிஷா நடிக்கும் வெப் சீரிஸ்.. BTS போட்டோவுடன் வெளிவந்த ஷூட்டிங் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை த்ரிஷா, நடிக்கும் புதிய வெப் சீரிஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trisha Krishnan Starring Web Series Brinda BTS

Also Read | மும்முரமாக நடைபெறும் லால் சலாம் பட வேலைகள்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த LATEST UPDATE..

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து, மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகை த்ரிஷா.

சிறிய இடைவேளையில், தற்போது அவர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைந்திருக்கும்.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

Trisha Krishnan Starring Web Series Brinda BTS

பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும்  450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என படநிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழில் நடிகை த்ரிஷா, 'தி ரோடு' படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதேபோல் தற்போது மலையாள நடிகர் சூப்பர்ஸ்டார் மோகன்லால் உடன் ராம் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு பல மாதம் முன்பே வந்தது. திரிஷ்யம், பாபநாசம் படப்புகழ் ஜிது ஜோசப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. டாக்டராக இந்த படத்தில் த்ரிஷா நடிக்கிறார்.

மேலும் தெலுங்கில் பிருந்தா எனும் வெப் சீரிஸ் ஒன்றில் த்ரிஷா நடித்து முடித்துள்ளார். சோனி லிவ் தளத்தில் ஒளிபரப்பாக உள்ள இந்த வெப் சீரிஸில் தெலுங்கானா மாநில போலீஸ் அதிகாரியாக த்ரிஷா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டதாக த்ரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சூர்யா வங்கலா இந்த சீரிஸை இயக்க, தினேஷ் பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

Also Read | BIGGBOSS: சிறைக்கு செல்லும் குயின்ஸி & ராபர்ட்.. இது தான் காரணமா? பரபரப்பான வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Trisha Krishnan Starring Web Series Brinda BTS

People looking for online information on Brinda web series, Trisha Krishnan, Web Series will find this news story useful.