www.garudabazaar.com

இந்த வாரம் OTT-க்களில் ரிலீசாகும் திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்கள்.. ஒரு பார்வை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த அக்டோபர் மூன்றாம் வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் முக்கிய படங்கள் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

This October week OTT Release Movies Web series List

Also Read | 'BEAST' படத்துக்கும் 'PRINCE' படத்துக்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? சூப்பர் தகவல்

DOBAARAA (2022)

2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான மிராஜை அடிப்படையாகக் கொண்டு, டாப்ஸி பன்னு நடித்த படம் DOBAARAA.

அக்டோபர் 15 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்படுகிறது. ஒரு இளம் பெண் தன் தற்போதைய வாழக்கையை மாற்றும் ஆற்றலை வழங்கும் நேரப் பயணத்தில் ஈடுபடும் சூழலில், கடந்த காலத்தை மாற்றுவது நிகழ்காலத்தை மாற்றும் டைம் டிராவலை அடிப்படையில் இந்த படம் வெளியாகி உள்ளது

இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள இப்படத்தில் ராகுல் பட், சாஸ்வதா சாட்டர்ஜி மற்றும் பாவில் குலாட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

This October week OTT Release Movies Web series List

பஃபூன்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் வெளியான பபூன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 14ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடக நடிகரான வைபவ் வாழ்க்கை வறுமையான சூழலில் அதில் இருந்து மீள நினைக்கும் சந்தர்ப்பங்களில் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் வெளியாகி உள்ளது.

This October week OTT Release Movies Web series List

கணம்

அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள கணம் படத்தில் அமலா, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையைச் சார்ந்த திரைப்படம் இது. டைம் டிராவலை அடிப்படையில் இந்த படம் வெளியாகி உள்ளது. சோனி லிவ் தளத்தில் கடந்த அக்டோபர் 10 முதல் வெளியாகி உள்ளது. 

This October week OTT Release Movies Web series List

வெந்து தணிந்தது காடு

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே "வெந்து தணிந்தது காடு" படமாகும்.

This October week OTT Release Movies Web series List

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் இந்த படம் வெளியானது.  அக்டோபர் 13 முதல் வெந்து தணிந்தது காடு படம் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது.

Also Read | PRINCE படத்தின் அடுத்த சிங்கிள் பாடல்.. SK-ன் சூப்பர் டான்ஸ்சுடன் வெளியான GLIMPSE வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

This October week OTT Release Movies Web series List

People looking for online information on October week OTT Release Movies, OTT Release Movie, Web Series will find this news story useful.