www.garudabazaar.com

உலக அதிசயத்தை காண இத்தாலி சென்ற 'குந்தவை' த்ரிஷா.. அந்த கேப்சன் தான் செம்ம!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை த்ரிஷா இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Actress Trisha Krishnan Visit Italy Leaning Tower of Pisa

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான திரைப்படங்கள் நடித்து, மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகை த்ரிஷா.

சிறிய இடைவேளையில், தற்போது அவர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

Actress Trisha Krishnan Visit Italy Leaning Tower of Pisa

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும்  450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என படநிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழில் நடிகை த்ரிஷா, 'தி ரோடு' படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதேபோல் தற்போது மலையாள நடிகர் சூப்பர்ஸ்டார் மோகன்லால் உடன் ராம் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு பல மாதம் முன்பே வந்தது. திரிஷ்யம், பாபநாசம் படப்புகழ் ஜிது ஜோசப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. டாக்டராக இந்த படத்தில் த்ரிஷா நடிக்கிறார்.

Actress Trisha Krishnan Visit Italy Leaning Tower of Pisa

இந்நிலையில் த்ரிஷா இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இத்தாலியில் உள்ள பைசா சாய்ந்த கோபுரம் அருகில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், "மனிதனின் தவறு உலக அதிசயங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு சரியான உதாரணம் இந்த கட்டிடம்" என த்ரிஷா பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Trisha Krishnan Visit Italy Leaning Tower of Pisa

People looking for online information on Italy, Leaning Tower of Pisa, Pisa, Ponniyin Selvan, Ram, Trisha will find this news story useful.