பிரபல இளம் நடிகரின் தயாரிப்பில் அஞ்சலி நடித்துள்ள வெப் சீரிஸ்.. ரிலீஸ் எப்போ.? எதுல?
முகப்பு > சினிமா செய்திகள்Tribal Horse Entertainment நிறுவனம் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திற்காக, இயக்குநர் திரு இயக்கத்தில், கணேஷ் கார்த்திக்கின் கதை மற்றும் திரைக்கதையில், நடிகை அஞ்சலி முதன்மை வேடத்தில் நடிப்பில் 10 எபிசோடுகளாக உருவாகியுள்ள திரில்லர் இணைய தொடர் “ஜான்ஸி”. வாழ்வின் கடந்த கால நினைவுகளை மறந்து போன ஒரு பெண், கடந்த காலத்தின் பின்னிருக்கும் ரகசியங்களை தேடுவதே, இந்த தொடரின் கதை.

Also Read | நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்.. சென்னையில் எங்கே? எப்போ? அவரே வெளியிட்ட அறிவிப்பு!
நடிகர்கள் அஞ்சலி, சாந்தினி சௌத்திரி, ராஜ் அர்ஜுன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ராமேஸ்வரி தல்லூரி, சம்யுக்தா ஹார்நாட், சரண்யா ராமச்சந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி, கல்யாண் மாஸ்டர், முமைத் கான் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் திரு இயக்கியுள்ள இந்த தொடருக்கு, அர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீசரண் பக்கலா இசையமைத்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். நடிகர் கிருஷ்ணா குலசேகரன் இதனை தம்முடைய Tribal Horse Entertainment நிறுவனத்தின் கீழ் தயாரிக்க, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி முதலாக பல மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.
இத்தொடரின் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் பத்திரிக்கையாளர் முன் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவினில்.. நடிகர் ஆதித்யா பேசியதாவது, “என்னுடைய ஃபர்ஸ்ட் புராஜக்ட்டுக்கு கிருஷ்ணா சார் தான் புரடியூசர். அவர் என் ஷோ ரீல் பார்த்து அரை மணி நேரம் பாராட்டினார். ஒரு நடிகராக இருந்துகொண்டு அடுத்தவரை பாராட்ட பெரிய மனம் வேண்டும். அவர் கூப்பிட்ட போது நான் யோசிக்கவே இல்லை. உடனே ஒப்புக்கொண்டேன். தெலுங்கில் நானே டப் பண்ணியிருக்கேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ” என பேசினார்.
இயக்குநர் திரு பேசும்போது, “கிருஷ்ணா என்னிடம் போன் செய்து இந்தக்கதை பற்றி சொன்னார். முதலில் வெப் சீரிஸாக எடுக்க நிறைய தயக்கம் இருந்தது. இதை எப்படி எடுக்க முடியும் என பயமாக இருந்தது. மிகப்பெரிய ஸ்கேலில் எடுக்க வேண்டிய கதை. எல்லோரும் சேர்ந்து அதை குறிப்பிட்ட பட்ஜெட்டில் 10 எபிஸோடில் எடுத்துள்ளோம். இதில் மிகப்பெரிய ப்ளஸ் திரைக்கதை. மிக அட்டகாசமாக எழுதியிருந்தார்கள் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். கிருஷ்ணாவுடன் நடிகராக அவரை இயக்கி வேலை பார்ப்பேன் என நினைத்தேன். ஆனால் அவர் புரடியூசராக இருக்கும் படைப்பில் வேலை பார்த்திருக்கிறேன். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார். ஒளிப்பதிவாளர் மிக அட்டகாசமாக செய்துள்ளார். ஜீகே மிக சிறந்த இயக்குநராக வருவார். அஞ்சலி இதில் அதிரடி ஆக்சன் பண்ணியிருக்கார். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள். இந்தப் படைப்பு கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும் நன்றி.
நடிகை சரண்யா பேசும்போது, “தமிழில் எனக்கு முதல் வெப் சீரிஸ். கிரித்தி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளேன். மிக புதுமையான அனுபவமாக இருந்தது. இயக்குநர் திருவிடம் நிறைய கற்றுக்கொண்டேன். தயாரிப்பாளர் கிருஷ்ணா, இயக்குநர் மற்றும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
இப்படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான கிருஷ்ணா பேசும்போது, “இந்த வருடம் எனக்கு படம் எதுவும் வரவில்லை என்பதால் உங்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் அடுத்ததாக "பெல் பாட்டம்" வருகிறது. எனக்கு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது கனவு. இது எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு … ஹாட்ஸ்டாரில் இந்த கதையை சொன்னவுடன் ஒப்புக்கொண்டார்கள். ஜீகேயிடம் இதை பெரிய டைரக்டர் பண்ணினால் நல்லாருக்கும் என்றவுடன் ஜீகே ஒப்புக்கொண்டார். திருவிடம், ஜீகே ஒரு எபிஸோடாவது டைரக்ட் பண்ணணும் என்றேன். அவரும் பெருந்தன்மையாக ஓகே என்றார். அஞ்சலி போன்ற திறமையான நடிகர்களை பல மொழிகளிலும் இருந்து கூட்டி வந்திருக்கிறோம். நான் இதில் நடிக்கவில்லை எனக்கு எதாவது கொடுங்க எனக் கேட்டேன். ஆனால் கடைசி வரை தரவில்லை. இந்த தொடர் மிக நன்றாக வந்துள்ளது. முக்கியமாக இத்தொடருக்கு பெரும் ஒத்துழைப்பு தந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார்க்கு நன்றி. இது எங்கள் மனதுக்கு பிடித்த படைப்பு, உங்களுக்கும் பிடிக்கும் நன்றி.” என்று பேசினார்.
Also Read | Bigg boss 6 tamil : தடுத்து நின்ற தனலட்சுமி.. இடித்து தள்ளி உள்ளே போன அசீம்.. Doll Task-ல் அடுத்த சம்பவம்.!