www.garudabazaar.com

அக்டோபர் கடைசி வாரம் OTT-க்களில் ரிலீசாகும் திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்கள்.. ஒரு பார்வை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் முக்கிய படங்கள் & வெப் சீரிஸ் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

This October Last Week OTT Release Movies Web Series Updated List

நானே வருவேன்

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில்

கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் "  நானே வருவேன்"  திரைப்படம் உலகமெங்கும் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி ( வியாழக்கிழமை ) வெளியானது.

This October Last Week OTT Release Movies Web Series Updated List

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா & நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும்,   ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டது.

டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படம் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில்  அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. வாடிக்கையாளர்கள் 27.10.2022 முதல் இந்த படத்தை பிரைம் வீடியோ தளத்தில் கண்டு களிக்கலாம்.

பொன்னியின் செல்வன்

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியானது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் படம் மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் 450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என படநிறுவனம் அறிவித்துள்ளது.

This October Last Week OTT Release Movies Web Series Updated List

அனைத்து ரசிகர்களும் பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் பிரபல அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் 199 ரூபாய் வாடகைக்கு கிடைக்கிறது. மேலும் அனைத்து பிரைம் வீடியோ வாடிக்கையாளர்களுக்கு வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் பொன்னியின் செல்வன் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜான்ஸி

Tribal Horse Entertainment நிறுவனம் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திற்காக, இயக்குநர் திரு இயக்கத்தில், கணேஷ் கார்த்திக்கின் கதை மற்றும் திரைக்கதையில், நடிகை அஞ்சலி முதன்மை வேடத்தில் நடிப்பில் 10 எபிசோடுகளாக உருவாகியுள்ள திரில்லர் இணைய தொடர் “ஜான்ஸி”. வாழ்வின் கடந்த கால நினைவுகளை மறந்து போன ஒரு பெண், கடந்த காலத்தின் பின்னிருக்கும் ரகசியங்களை தேடுவதே, இந்த தொடரின் கதை.

நடிகர்கள் அஞ்சலி, சாந்தினி சௌத்திரி, ராஜ் அர்ஜுன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ராமேஸ்வரி தல்லூரி, சம்யுக்தா ஹார்நாட், சரண்யா ராமச்சந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி, கல்யாண் மாஸ்டர், முமைத் கான் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் திரு இயக்கியுள்ள இந்த தொடருக்கு, அர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீசரண் பக்கலா இசையமைத்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். நடிகர் கிருஷ்ணா குலசேகரன் இதனை தம்முடைய Tribal Horse Entertainment நிறுவனத்தின் கீழ் தயாரிக்க,  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி முதலாக பல மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

அப்பன்

இயக்குனர் மஞ்சு இயக்கிய அப்பன் திரைப்படம், டார்க் காமெடி வகைமையில் உருவானது. கிரேஸ் ஆண்டனி, அனன்யா, சன்னி வேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சோனி லிவ் தளத்தில் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

This October Last Week OTT Release Movies Web Series Updated List

People looking for online information on Naane varuvean, OTT, Ponniyin Selvan will find this news story useful.