www.garudabazaar.com

Vijay : விஜய், சிம்பு பங்குபெற்ற ‘வாரிசு’ அடுத்த சிங்கிள் Shoot.? நடன மாஸ்டர் இவரா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். 'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜூ & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

Simbu Vijay Sandy Master in Vijay single shoot deets

Also Read | "ரொம்ப நம்புனேன்.. பிக்பாஸ் கேமரா முன் நின்னு அவன் பேசுனது" - ராபர்ட்டின் Transformation குறித்து வனிதா

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளதும், இந்த படத்தின் UK தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Simbu Vijay Sandy Master in Vijay single shoot deets

முன்னதாக தமிழகத்தில் வாரிசு திரைப்படத்தை கைப்பற்றி விநியோகம் செய்யப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் பரவலாக இருந்தது. இந்த கேள்விகளுக்கு விடைகிடைப்பதுபோல், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமத்தை பல முன்னணி திரைப்படங்களை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

Simbu Vijay Sandy Master in Vijay single shoot deets

இந்த நிலையில் வாரிசு படத்தின் அடுத்த பாடல் காட்சி ஷூட்டிங் தொடர்பான அப்டேட்கள் தெரியவந்துள்ளன. அதன்படி சாண்டி மாஸ்டர் கோரியோகிராஃப் பண்ணும் இந்த பாடலை சிம்பு பாடியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் இவிபி கார்டனில் நடந்த இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பில் சிம்பு, தமன் மற்றும் பாடகர்கள் கொண்ட குழுவுடன் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன. முன்னதாக இந்த பாடலுக்கான 2 காட்சிகளின் படப்பிடிப்பில் நடிகர் விஜய்யும் கலந்துகொண்டதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

வாரிசு திரைப்படத்தின் அடுத்த சிங்கிள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | Varisu : Dance விஜய் .. Voice சிம்பு.. ‘வாரிசு’ பட பாடலை சிம்பு பாடியிருக்காரா..? வேறமாரி அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

Simbu Vijay Sandy Master in Vijay single shoot deets

People looking for online information on S Thaman, Simbu, Str, Varisu, Vijay will find this news story useful.