ஜானுவுக்கு பிறந்தநாள்! ராம் தந்த ஸ்பெஷல் பரிசு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த பரமபதம் விளையாட்டு பட டிரெய்லரை வெளியிட்டார் விஜய் சேதுபதி.

Trisha Birthday Special

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக நாயகியாகவே நடித்து வருபவர் என்ற பெருமைக்குரியவர் நடிகை திரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு என இன்றைய முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

தற்போது இளம் நாயகிகளுக்கு போட்டியாக ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்றுதான் ஆக்ஷன், த்ரில்லர் நிறைந்த 'பரமபத விளையாட்டு'. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷாவுடன், நந்தா துரைராஜ், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

அம்ரிஷ் இசையமைத்துள்ள அப்படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். இந்த படத்தை 24ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


இந்நிலையில், திரிஷாவின் பிறந்தநாளையொட்டி இன்று அப்படத்தின் டிரெய்லர் வெளியானது இதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிடட்டார். திரிஷாவும், விஜய் சேதுபதியும் 96 படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜானுவுக்கு, ராம் வரும் பரிசு இது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

திரிஷாவின் 60வது படமாக உருவாகி வரும் பரமபதம் விளையாட்டு ஒரு அரசியல் திகில் படம். ஒரு இரவில் காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களே கதை. இப்படம், நிச்சயம் எல்லா வயது ரசிகர்களுக்கும் பிடிக்கும் என படக்குழு நம்பிக்கையுடன் கூறுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங்,  பணிகள் நடக்கின்றன. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, நடிகை திரிஷாவுக்கு சக நடிகர், நடிகையர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜானுவுக்கு பிறந்தநாள்! ராம் தந்த ஸ்பெஷல் பரிசு வீடியோ