திரிஷாவின் 60வது படத்தில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரிஷா நடிப்பில் கடந்த வருடம் வெளியான '96' திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவர் நடித்த 'பேட்ட' திரைப்படமும் அமோக வெற்றி பெற்றது.

Trisha's Paramapadham vilayattu trailer will release in may 3

அதனைத் தொடர்ந்து 'பரமபதம் விளையாட்டு' என்ற படத்தில் திரிஷா தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை திருஞானம் இயக்குகிறார். இந்த படத்தை 24 ஹவர்ஸ் புரொடக்ஷன் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். இந்த படம் திரிஷாவின் 60 வது படமாகும். இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு மே 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.