www.garudabazaar.com

"H. வினோத் முதல்ல வாரிசு தான் பாக்க போறார்".. துணிவு பாடலாசிரியர் வைசாக் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Thunivu Lyricist Vaisagh Exclusive about H Vinoth and Varisu

Also Read | "இவங்க கேட்டதற்காக போட்டோஷூட்".. பட்டுப் புடவை அணிந்து KGF ஶ்ரீநிதி ஷெட்டி வைரல் PHOTOS!

வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

Thunivu Lyricist Vaisagh Exclusive about H Vinoth and Varisu

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

Thunivu Lyricist Vaisagh Exclusive about H Vinoth and Varisu

இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுத அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இரண்டாவது சிங்கிள் பாடல் காசேதான் கடவுளடா பாடலை வைசாக் எழுதி பாடியுள்ளார்.

Thunivu Lyricist Vaisagh Exclusive about H Vinoth and Varisu

இந்நிலையில் துணிவு படத்தின் பாடலாசிரியர் வைசாக் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். துணிவு & வாரிசு படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது குறித்தும், முந்தைய அஜித் & விஜய் படங்களின் பாடல் வரிகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வைசாக், "இப்போ ஹெச். வினோத் சார்ட்ட கேட்டப்போ கூட நான் வாரிசு தான் போய் பார்ப்பேன்" என பதில் கூறியுள்ளார். தமிழ் சினிமா ஆரோக்கியமா இருக்குறதுக்கு நம்ம எல்லாராலையும் செய்ய முடிந்ததை செய்றது தான். ஒரே சமயத்தில் இரண்டு படமும் வருவதால் இப்படி பேச்சுக்கள் வருகிறது. பாடல்களை பொறுத்தவரை இயக்குனர்களும் அதுபோல வரிகளை வைக்க வேண்டும் என்று கேட்பதில்லை. படத்திற்கு தேவையான பாடல் வரிகளை மட்டுமே இரண்டு தரப்பும் வைத்துள்ளனர். அப்படி பாடல் வரிகள் இருந்தால் வினோத் சாரே நீக்க சொல்லி இருப்பார்" வைசாக் கூறினார்.

Also Read | "குழந்தை பெற்ற பிறகும் HOT-ஆ இருக்கீங்க".. இணையவாசியின் மோசமான கேள்விக்கு ப்ரணிதா பதிலடி!

"H. வினோத் முதல்ல வாரிசு தான் பாக்க போறார்".. துணிவு பாடலாசிரியர் வைசாக் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Lyricist Vaisagh Exclusive about H Vinoth and Varisu

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Thunivu, Thunivu Lyricist Vaisagh, Varisu, Vijay will find this news story useful.