www.garudabazaar.com

"இந்த பாட்டு கேட்டு பலமுறை அழுதுட்டேன்".. 'வாரிசு' அம்மா Song.. தமன் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

Thaman S Tweet about Varisu 3rd Single Amma Song

Also Read | BIGGBOSS அசீம் பத்தி உங்க ஒப்பீனியன்?.. ஒரே வார்த்தையில் பதிலளித்த G.P. முத்து!

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Thaman S Tweet about Varisu 3rd Single Amma Song

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thaman S Tweet about Varisu 3rd Single Amma Song

இன்று இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் வெளியீட்டுக்கு முன் இசையமைப்பாளர் தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Thaman S Tweet about Varisu 3rd Single Amma Song

அதில்,  "என்ன ஒரு உணர்ச்சிகரமான நாள் இது  ❤️‍ நடிகர் விஜய் அண்ணா ❤️ & எங்கள் அன்பான ரசிகர்களுக்காக Soul Of Varisu 🤗. நீங்கள் இதைக் கேட்ட பிறகு நிச்சயமாக உங்கள் அம்மாவை நினைத்து பார்ப்பீர்கள். 💕 அன்புள்ள   பாடலாசிரியர் விவேக் நீங்கள் பலமுறை என் இதயத்தை அழவைத்தீர்கள் & உங்கள் வார்த்தைகளால் என் கண்களை ஈரமாக்கினீர்கள் 💔 இயக்குனர் வம்ஷி லவ் யூ ❤️" என தமன் ட்வீட் செய்துள்ளார்.

 

Also Read | “ஏன் போட்ட சட்டையே போடுறீங்க...பணத்துக்கா குறைச்சல்?”..பிரபல இயக்குனருக்கு H. வினோத் பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

Thaman S Tweet about Varisu 3rd Single Amma Song

People looking for online information on S Thaman, Thaman S Tweet, Varisu, Varisu 3rd Single Amma Song, Vijay will find this news story useful.