www.garudabazaar.com

"நான் கொண்ட காயங்கள் போகுதம்மா".. நெஞ்சை உருக்கும் வாரிசு படத்தின் அம்மா பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Soul of Varisu Mother Song Released Thalapathy Vijay

Also Read | BIGGBOSS அசீம் பத்தி உங்க ஒப்பீனியன்?.. ஒரே வார்த்தையில் பதிலளித்த G.P. முத்து!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

Soul of Varisu Mother Song Released Thalapathy Vijay

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

Soul of Varisu Mother Song Released Thalapathy Vijay

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பாடல்களை தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Soul of Varisu Mother Song Released Thalapathy Vijay

இந்நிலையில் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் ஆன்மா என்ற வாசகத்துடன் வெளியாகி உள்ளது. தாய் பாசத்தை மையமாக வைத்து இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலை பாடகி சித்ரா பாடியுள்ளார்.

பாடலின் லிரிக்கல் வீடியோவில் நடிகர் விஜய் & நடிகை ஜெயசுதா தோன்றி உள்ளனர். கோட்டோவியமாக இவர்களின் தோற்றம் இடம்பெற்றுள்ளது.

பால் முகம் காணவே நான் தவித்தேன் இன்று நீ வர  கேட்குதே ஆரோ..என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே..நான் இழந்த சிரிப்பும் இதயத்துடிப்பும் மீண்டும் இங்கே.. என்ற வரிகளிலும் பாடலில் இடம் பெற்றுள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மாவை சந்திக்க வரும் மகனை நினைத்து தாய் பாடுவது போல் இந்த பாடல் வெளியாகி உள்ளது.

 

Also Read | "இந்த பாட்டு கேட்டு பலமுறை அழுதுட்டேன்".. 'வாரிசு' அம்மா Song.. தமன் உருக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Soul of Varisu Mother Song Released Thalapathy Vijay

People looking for online information on S Thaman, Soul of Varisu Mother Song, Varisu, Vijay will find this news story useful.