Breaking : Thalapathy66 ஃபர்ஸ்ட் லுக் எப்போ??.. வெளியான 'செம' மாஸ் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் இயக்கத்தில் கடைசியாக, 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்த நடிகர் விஜய், அடுத்ததாக வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத "தளபதி 66" படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy66 movie first look release date sources

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்து வருகிறார்.

விஐய் மற்றும் ராஷ்மிகா ஆகியோருடன் ஏராளாமான நட்சத்திர பட்டாளங்களும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

விஜய் படத்திற்கு முதல் முறை..

சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, பிரபு, ஷ்யாம், ஜெய சுதா, சங்கீதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள், தளபதி 66 படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதே போல, தளபதி 66 திரைப்படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். விஜய் படத்திற்கு அவர் இசைமையப்பது இது தான் முதல் முறை.

பொங்கல் ஸ்பெஷலாக "தளபதி 66"

தளபதி 66 படத்தின் பூஜை, சென்னையில் வைத்து நடைபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் வைத்து இதன் படப்பிடிப்பு, மிகவும் அசத்தலாக நடைபெற்று வந்தது. சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த புகைப்படங்களும் அதிகம் வைரலாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த தளபதி 66 படப்பிடிப்பு, கடந்த சில தினங்களுக்கு முடிவடைந்தது பற்றி, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல, 2023 ஆம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக, தளபதி 66 வெளிவரும் என்றும் அவர்கள் அறிவித்திருந்தனர்.

அசத்தல் தகவல்

இந்நிலையில், தளபதி 66 குறித்து, அசத்தலான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. விஜய் - வம்சி கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் போட்டோஷூட், நாளை சென்னையில் வைத்து நடைபெறவுள்ளதாகவும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 வெளியாகும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy66 movie first look release date sources

People looking for online information on Dil Raju, First Look, Prakash Raj, Rashmika Mandanna, Sarath Kumar, SS Thaman, Thalapathy66, Vamsi Paidipally, Vijay will find this news story useful.